சிறு வணிகங்களுக்கு OkCredit எவ்வாறு உதவுகிறது?
OkCredit - எளிமையானது மற்றும் பாதுகாப்பானது!
ஒவ்வொரு சிறு வணிகமும் அதன் முழு திறனுடன் செயல்பட உதவவேண்டும் என்ற கனவுடன் 2016ஆம் ஆண்டு OkCredit துவங்கபட்டது. துவங்கிய நாள் முதல் இன்று வரை வணிகர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. நம் நாட்டு மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்வதில் சிறு வணிகங்கள் மற்றும் மளிகைக் கடைகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
மளிகைப்பொருட்கள், ஆடை, பாத்திரங்கள், மின்னணு உபகரண கடைகள் முதல் ஆட்டோமொபைல் கடைகள் வரை ஒவ்வொரு வணிகத்திற்கும் ஒரு வகையான ஆன்லைனில் கணக்கை பராமரிக்கும் அமைப்பின் தேவை உள்ளது.
OkCredit உங்களது கணக்கீடு சிக்கல்கள் அனைத்திற்கும் காகிதமற்ற ஆன்லைன் முறை மூலம் தீர்வைத் தருகிறது. இது எல்லா வணிகங்களுக்கும் தேவைப்படக்கூடிய, பயன்படுத்த எளிமையான ஆப் ஆகும்.
நீங்கள் வைத்திருப்பது ஒரு சிறிய கடையோ அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டோ, OkCredit உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்கும்.
கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூக இணைவெளிக்கு ஏற்ற வணிகங்களையும், பேமெண்ட் முறைகளையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். நீங்களும் அதுபோன்று வணிகம் செய்ய இந்த ஆப் உதவும்.
மிகச்சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் உங்களுக்கும் உங்கள் கஸ்டமர்களுக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும் குழப்பமில்லாமலும் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். OkCredit உங்களுக்கான "டிஜிட்டல் இந்தியாவின் டிஜிட்டல் கடன் கணக்கு ஆப்" ஆகும். உங்களது நம்பிக்கையே எங்கள் பெருமை.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ஆப், உங்களது தினசரி கணக்குகளை எளிமையாக நிர்வகிக்க உதவும். இதன் மூலம் நீங்கள்-
- உங்கள் வாடிக்கையாளர்களைச் சேர்க்கலாம்
- அனைத்து பரிவர்தனைகளையும் பதிவு செய்யலாம்
- எளிதாக கட்டண நினைவூட்டல்களை அனுப்பலாம்
- பேமென்ட்களை உடனடியாக பெறலாம்
உங்களது கணக்குகள் அனைத்தையும் காகித புத்தகத்தில் பதிவிடும் சீரமைத்தையும், அதானால் ஏற்படும் பிழைகளையும் மறந்திடுங்கள். இந்த எளிமையான மற்றும் முற்றிலும் இலவச மொபைல் ஆப்-ஐ Android மொபைல்களில் பயன்படுத்தலாம்.

OkCredit இன் பன்முகத்தைன்மை காரணமாக, அதன் பயனர்கள் அவர்கள் விரும்பும் கீழ்காணும் எந்த மொழியிலும் அதை பயன்படுத்த முடியும்-
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
- மலையாளம்
- தெலுங்கு
- கன்னடம்
- மராத்தி
- குஜராத்தி
- பெங்காலி
- ஹிங்லிஷ்
- பஞ்சாபி
ஏன் OkCredit?
வேறு பல ஆப்கள் இருப்பினும், OkCredit மட்டுமே உங்கள் விரல் நுனியில் பல வசதிகளை வழங்குகிறது.
- எளிதில் புரிந்துகொள்ள மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய இன்டர்பேஸ்.
- உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, லேட்டஸ்ட் மென்பொருளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
- எந்தவொரு ஆப் அல்லது மென்பொருள் மூலமாகவும் உங்கள் தரவுகளை நகல் எடுக்கமுடியாத பாதுகாப்பான ஆப்.
- இரட்டை பேமெண்ட் நினைவூட்டல் - ஒரு கிளிக்கில் பேமெண்ட் பெற, WhatsApp மற்றும் SMS நினைவூட்டல்களை அனுப்பலாம்.
- பல்வேறு பேமெண்ட் முறைகள் - BHIM, UPI, GPay, PhonePe, டெபிட்/ கிரெடிட் கார்டுகள் என உங்கள் வசதிக்காக பல்வேறு பேமெண்ட் முறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- தானியங்கு டேட்டா பேக்கப் - உங்கள் தொலைபேசி தொலைத்தாலோ, சேதமானாலோ உங்கள் எல்லா தரவும் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும். உங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்ணை OTP மூலம் சரிபார்த்து உங்கள் முந்தைய தரவை விரைவாக மீட்டெடுக்கலாம்.
- டிஜிட்டல் - குழப்பமான கணக்கு புத்தகங்களைத் தவிர்த்து, உங்கள் லெட்ஜர்கள் அனைத்தையும் ஆன்லைனில் பராமரிக்கிறது.
- ஆன்லைன் கட்டண நினைவூட்டல்கள் மற்றும் காலெக்சன் மூலம், நீங்கள் உங்கள் பழைய கஸ்டமர்களைக் கேட்கவோ அல்லது அவர்களைத் தேடிச்செல்லவோ தேவையில்லை. ஒவ்வொரு கஸ்டமரின் நிலுவையில் அனைத்தையும் கண்காணிக்கும் வசூலிக்கவும் உங்களுக்கான ஆப் ஆகும்.
- புதுமையானது - உங்கள் விரல் நுனியில் புதிய தொழில்நுட்பத்துடன், உங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் வளர்க்கவும், கணக்கு நிர்வாகத்தில் சிறந்தவராகவும் OkCredit உங்களுக்கு உதவும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் OkCredit-ஐ பயன்படுத்துகின்றனர்.

எந்த வகையான வணிகங்களுக்கு OkCredit பொருத்தமானது?
பல்வேறு ஆப்-கள் இருந்தாலும், OkCredit மட்டுமே பல வசதிகளை உங்கள் விரல் நுனியில் தருகிறது-
📱மொபைல் ரீசார்ஜ்/ ரிப்பேர்/ DTH ரீசார்ஜ்/ மொபைல் உதிரிபாகங்கள் கடை
🏥 மருந்து கடைகள்
🍛 டீ/ உணவு/ ஜூஸ்/ ஸ்நாக்ஸ் சென்டர்
🧥 துணிக் கடைகள்
🛒 மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்
🍇 சிகரெட் கடை மற்றும் பழக்கடைகள்
💸 நிதி நிறுவனம்/ தனிப்பட்ட கடன் மேலாண்மை
மேலும் தகவல் அல்லது கேள்விகளுக்கு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் help@okcredit.in க்கு மின்னஞ்சல் செய்யலாம்.
இனியும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? OkCredit மூலம் டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைக்கவும். ஆப்-ஐ இன்று டவுன்லோட் செய்யுங்கள்.
FAQs - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
OkCredit என்றால் என்ன?
OkCredit என்பது இந்தியா முழுவதும் இருக்கும் சிறு வணிகங்களை ஊக்குவிக்கும் டிஜிட்டல் ஆன்லைன் லெட்ஜர் ஆகும். பெங்களூரை மையமாகக் கொண்டு இந்த ஆப் துவங்கிய 3 ஆண்டுகளில் லட்சக் கணக்கான இன்ஸ்டால்களை கொண்டுள்ளது. எளிமையான வடிவம், பல மொழி விருப்பங்கள் என பல ஆண்டுகளாக இது பல வர்த்தகர்களின் விருப்பமாக உள்ளது.
OkCredit ஆப் பாதுகாப்பானதா?
முற்றிலும் பாதுகாப்பானது. OkCredit என்பது Android, IOS மென்பொருளில் சுமூகமாக செயல்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆப் ஆகும். நீங்கள் மட்டுமே உங்கள் தரவை பார்க்கலாம். எனவே, உங்களுக்கும் உங்கள் கஸ்டமர்களுக்கும் இடையே ரகசியத்தன்மையுடன் வைத்திருக்கலாம்.
OkCredit-ஐ எவ்வாறு பயன்படுத்துவது?
படி 1- உங்கள் Google Play Store அல்லது App Store க்குச் சென்று OkCredit ஆப்-ஐ தேடுங்கள்.
படி 2- ஆப்-ஐ டவுன்லோட் செய்த பிறகு, அதன் முகப்புப் பக்கத்தைத் திறந்து, தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
படி 3- 11 மொழி விருப்பங்களிலிருந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வுசெய்க.
படி 4- விரைவான பேமெண்ட் நினைவூட்டல்களை அனுப்பி, உங்கள் வழக்கமான அல்லது மாதாந்திர கஸ்டமர்களிடமிருந்து உரிய தொகையை வசூலிக்கத் தொடங்குங்கள்.
எனது மொபைல் தொலைந்துவிட்டால்/ சேதமடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் தொலைபேசி தொலைத்தாலோ, சேதமானாலோ உங்கள் எல்லா தரவும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு சேமிக்கப்படும்.
OkCredit ஆப் எந்த நாட்டிலிருந்து வந்தது?
OkCredit முழுக்கமுழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ஆப் ஆகும். இது உங்கள் தினசரி கடன் கணக்கு கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கு பங்களிக்கும் நோக்கில், எங்கள் ஆப் எளிதான திரைகள் மற்றும் வார்த்தைகளை பயன்படுத்துகிறது, இது பொதுவான இந்திய வணிகர்கள் அல்லது சிறு நகர வணிகர்கள்/ வர்த்தகர்களுக்கு வசதியாக இருக்கும்.